வெப்ப அயற்சியால் கோழிகள் இறக்க வாய்ப்புள்ளதால் பண்ணை மேலாண் முறைகளை கையாளுவது அவசியம் என
வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் கோழியின் நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலும் வெப்ப அயற்சி மற்றும் மேல்மூச்சுக்குழல் அயற்சி பாதிப்பால் இறந்தது தெரியவந்ததுள்ளது.
பண்ணையாளர்கள் வெப்ப அயற்சியின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த, தேவைப்படும் நேரத்தில் நீர்தெளிப்பான் உபயோகிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெயில் காலங்களில் வெள்ளைக் கழிச்சல் நோயின் தாக்கத்தைக் குறைக்க கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். மேல்மூச்சுக்குழல் அயற்சி நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தகுந்த உயிர் பாதுகாப்பு முறைகளை கையாளுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த வாரம் வானிலையில் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் 99.5 மற்றும் 75.2 டிகிரியாக நிலவியது. தற்போது வரும் நான்கு நாள்களுக்கு நாமக்கல் மாவட்ட வானிலையில் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும்.
பகல் வெப்பம் 100.4 டிகிரியாகவும், இரவு வெப்பம் 75.4 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.