Home /local-news /

பீஸ்ட் ரிலீஸ்.. தியேட்டரே தெரியாத அளவுக்கு பேனர்களால் அதகளம் செய்த நாமக்கல் விஜய் ரசிகர்கள்!!

பீஸ்ட் ரிலீஸ்.. தியேட்டரே தெரியாத அளவுக்கு பேனர்களால் அதகளம் செய்த நாமக்கல் விஜய் ரசிகர்கள்!!

Namakkal

Namakkal Beast Release

Namakkal Beast Release | கண்டுபுடி கண்டுபுடி  தியேட்டர் இங்குதான் இருக்கிறதா என்று தேடும் அளவிற்கு பேனர்களால் அலங்கரித்து மேளதாளத்துடன் கோலமாக பீஸ்ட் படத்தை கொண்டாடிய  நாமக்கல் விஜய் ரசிகர்கள்.

    கண்டுபுடி... கண்டுபுடி... தியேட்டர் இங்குதான் இருக்கிறதா என்று தேடும் அளவிற்கு பேனர்களால் அலங்கரித்து மேளதாளத்துடன் கோலாகலமாக பீஸ்ட் படத்தை கொண்டாடிய நாமக்கல் விஜய் ரசிகர்கள்.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட்.  இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது .பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி உள்ளதால் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

    தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கே ரசிகர்களின் சிறப்பு முதல் காட்சி திரையிடப்பட்டது. இதனால் இரவு முழுவதும் ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு படத்தை வரவேற்றனர். இதில் குறிப்பாக நாமக்கல் முக்கிய பகுதியில் பீஸ்ட் படத்தை திருவிழா போல் கொண்டாடினார்கள்.

    குறிப்பாக திருச்செங்கோடு பகுதியில் உள்ள ஜோதி தியேட்டரில் மேளதாளத்துடன் ஆடிக்கொண்டும் பட்டாசு வெடித்தும்  பீஸ்ட் படத்தை விஜய் ரசிகர்கள் வரவேற்றனர். முக்கியமாக தியேட்டருக்கு வருபவர்களை தியேட்டர் இங்குதான் இருக்கிறதா என்று தேடிக் கண்டு பிடிக்கும் அளவிற்கு  பேனர்களை தியேட்டர் முழுவதும் வைத்து அலங்கரித்து இருந்தனர் விஜய் ரசிகர்கள்.

    அதுமட்டுமின்றி இங்கு இரவு முழுவதும் வாழை மரம் கட்டுதல், பந்தல் அமைத்தல், என திருவிழா போல் வெகு விமரிசையாக பீஸ்ட் திரைப்படத்தை வரவேற்றார்கள்.

    இதுபோன்றே நாமக்கல், பள்ளிபாளையம், குமாரபாளையம், ராசிபுரம், வெண்ணந்தூர், பரமத்தி வேலூர் என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தின் வெளியீட்டை உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

    செய்தியாளர்: சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Actor Vijay, Beast, Namakkal

    அடுத்த செய்தி