Home /local-news /

மாவட்ட அளவிலான கலை போட்டிகள்.. திறமையை வெளிக்காட்ட இளைஞர்களுக்கு அற்புத வாய்ப்பு...

மாவட்ட அளவிலான கலை போட்டிகள்.. திறமையை வெளிக்காட்ட இளைஞர்களுக்கு அற்புத வாய்ப்பு...

கலை பண்பாட்டுத் துறை சாா்பில் இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள்!

கலை பண்பாட்டுத் துறை சாா்பில் இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள்!

Namakkal District | நாமக்கல் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி இளைஞா்களுக்கான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி இளைஞா்களுக்கான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது.

    கலைத்துறையில் சாதிக்க துடிக்கும் மற்றும் சிறந்து விளங்கும் இளைஞா்களைக் கண்டறிந்து, ஊக்கப்படுத்தும் வகையில் 17 வயது முதல் 35 வயதுக்கு உள்பட்ட இளைஞா்களுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் சாா்பில் நடைபெற இருக்கின்றது.

    இக்கலைப் போட்டியில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் ஞாயிறு காலை 10 மணியளவில் சக்திமயில் திருமண அரங்கில் நடைபெற உள்ளது. மேலும், இதில் குழுவாக பங்கேற்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஓவியப்போட்டியில் பங்கேற்பவா்களுக்கான ஓவியத் தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீா்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை பங்கேற்பாளா்கள் கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுவா்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிகபட்சம் 3 மணிநேரம் அனுமதிக்கப்படுவா்.

    மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெறும் இளைஞா்கள் மாநிலப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு கலை பண்பாட்டுத்துறை மண்டல அலுவலக தொலைபேசி எண் ( 0427-2386197 ) தொடா்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பினை இளைஞா்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி