நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் டெபாசிட் பெற்றவர்கள் மற்றும் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1992- முதல் ரூ.1500 மற்றும் ரூ.15,200 டெபாசிட் தொகை பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில், 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்துள்ள பயனாளிகள் தங்கள் குழந்தைகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது நிறைவடைந்த நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு திட்ட வைப்புத்தொகைக்கான ரசீதுகள், குழந்தைகள் பிறப்பு சான்று, குழந்தைகளின் வங்கி கணக்கு, குழந்தைகளின் 10-ம் வகுப்பு தேர்ச்சி சான்று, ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களுடன் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வுத்தொகை பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் பயனாளிகள் தங்களிடம் உள்ள ரூபாய்1500 மற்றும் ரூபாய் 15,200 டெபாசிட் ஒரிஜனல் பத்திரம் மற்றும் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆகியவற்றுடன், சம்மந்தப்பட்ட பிடிஓ அலுவலகத்தில் உள்ள, சமூக நல விரிவாக்க அலுவலர் மற்றும் மகளிர் ஊர்நல அலுவலர்களை அணுகி சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.