Home /local-news /

நாமக்கல்: சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டி வரும் வயதான தம்பதியர்!

நாமக்கல்: சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டி வரும் வயதான தம்பதியர்!

நாமக்கல்:

நாமக்கல்: சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டி வரும் வயதான தம்பதியர்!

தினமும் 20 கிலோமீட்டர் பயணித்து வந்து இப்பகுதியில் துடைப்பம் தயாரிக்கும் தொழிலைச் செய்து வருகிறார்கள் துரைசாமி-விஜயா தம்பதியர்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கோழிகால்நத்தம் செல்லும் வழியில் உள்ளது நெசவாளர் காலனி என்ற ஊர். இங்கு யாரையும் நம்பாமல் தமக்கு என்று தொழில் இருந்தால் நம் வாழ்க்கை பார்த்துக் கொள்ள முடியும் என்று வயதான காலத்திலும் தினமும் 20 கிலோமீட்டர் பயணித்து வந்து இப்பகுதியில் துடைப்பம் தயாரிக்கும் தொழிலைச் செய்து வருகிறார்கள் துரைசாமி-விஜயா தம்பதியர்.

    எங்கள் பிள்ளைகள் கவனிக்காவிட்டாலும் தங்களுக்குள் இருக்கும் ஒற்றுமை மூலம் நாங்களே சுயமாக தொழிலை தொடங்கி செய்து வருவதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் எங்கள் இருவருக்கும் 20 வயது வருடங்கள் வித்தியாசம் ஆனாலும் ஒருபோதும் எங்களுக்கு ஏற்றத்தாழ்வு இருந்ததே இல்லை. அதுவே எங்களுக்கு இருக்கும் தைரியம் கூட என்று சொல்லலாம் என்று கூறுகிறார்கள்.

    தொடர்ந்து துரைச்சாமி-விஜயா தம்பதியரிடம் கேட்ட போது எங்கள் இருவருக்குமே உடலில் பல பிரச்சனைகள் இருக்கிறது. வாழும் வாழ்க்கை போராடிக் கொண்டிருக்கிறோம். எங்கள் பிள்ளைகள் கூலி வேலைக்கு தான் செல்கிறார்கள். இதனால் அவர்களின் குடும்பத்தை பார்த்து கொள்ளவதற்கே சரியாக இருக்கும். இதில் எங்களை எவ்வாறு கவனித்து கொள்வார்கள்.

    இதனாலேயே யாருக்கும் தொந்தரவு இருக்க கூடாதுனு எனக்கு நீ உனக்கு நான் என்று நாங்களே எங்களுக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கடந்த பத்து ஆண்டுகளாக துடைப்பம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதில் வரும் வருமானத்தை எங்களுடைய தேவைக்கு சரியாக இருக்கிறது.

    மேலும் எங்களுக்கு என்று இறப்பு ஒன்று நேர்ந்தால் அது இருவருக்கும் ஒரே நேரத்தில் தான் இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறோம். ஏனென்றால் இங்கு தனியாக இருந்து கஷ்டப்படுவதை விட இருவரும் ஒன்றாக சேர்ந்து இறந்தோம் என்ற பெயராவது இருக்கும் என்று கூறுகிறார்கள்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Vijay R
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி