Home /News /local-news /

நாமக்கல்: காப்புக்கட்டை முன்னிட்டு ஆவாரம் பூ விற்பனை ஜோர்!

நாமக்கல்: காப்புக்கட்டை முன்னிட்டு ஆவாரம் பூ விற்பனை ஜோர்!

காப்புக்கட்டு

காப்புக்கட்டு

Kappu kattu : நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் காப்புக் கட்டை முன்னிட்டு ஆவாரம் பூ, பீளைப்பூ, வேப்பிலை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் காப்புக் கட்டை முன்னிட்டு ஆவாரம் பூ, பீளைப்பூ, வேப்பிலை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் வீடுகளில் உள்ள தேவையற்ற குப்பைகளை எரித்து, வீடுகளை சுத்தம் செய்து, ஆவாரம் பூ, மற்றும் மாவிலைத் தோரணத்தை கட்டி தை மாதத்தை வரவேற்பது தமிழர்களின் மரபாக உள்ளது.

    இந்நாளில் பழைய துணிகளை எரிப்பது மட்டுமில்லாமல் காப்புக் கட்டு என்ற சடங்கும் நடக்கும். காப்புக் கட்டில் ஆவாரம் பூ , பீளைப்பூ, வேப்பிலை, மாவிலை, போன்ற இலைகளை வீட்டின் முன் கட்டி வைப்பார்கள். தற்போது இதன் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், காப்புக் கட்டுக்கு தேவையான இலைகளை காடுகள் மற்றும் மலையோர பகுதிகளுக்கு சென்று பறித்துக் கொண்டு வந்து அனைத்து இலைகளையும் ஒன்று சேர்த்து கட்டி இங்கு வியாபாரம் செய்கிறோம்.

    இது மார்கழி மாதத்தின் கடைசி சில நாட்களுக்கு மட்டும் தான் இந்த வியாபாரம் இருக்கும். பெரும்பாலான மக்கள் இதனை வாங்கி கொண்டு சென்று தங்களுடைய வீடுகளில் காப்புக் கட்டுவார்கள். மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான அளவிலேயே மக்கள் வருகை தருகிறார்கள் என்றும் தெரிவித்தனர்.

    செய்தியாளர் : சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Suresh V
    First published:

    Tags: Namakkal, Pongal

    அடுத்த செய்தி