நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் அம்பேத்கர் நகர் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறுவர் சிறுமியர்களுக்கான பல வித்தியாசமான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், சிறுவர்களுக்கான பானை உடைத்தல் போட்டிக்கு பதிலாக வித்தியாசமான முயற்சியில் டின் வைத்து டின் உடைத்தல் போட்டி என்று நடைபெற்றது.
அதாவது, குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு நாற்காலியில் சிறிய வடிவிலான டின்னை வைத்து, சிறுவர்களுக்கு கண்களை கட்டி விட்டு சரியாக டின்னை யார் தட்டி விடுகிறார்களோ அவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்கள்.
இதற்காக அப்பகுதியில் இருந்த சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் வெற்றிப் பெறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து விழாக்குழுவினரிடம் கேட்ட போது, "கடந்த 49 வருடங்களாக விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகிறோம். மேலும் இங்கு முக்கியமாக சிறுவர்களை ஊக்குவிக்குமாக கல்வி சார்ந்த போட்டிகளை நடத்தி வருகிறோம்.
இந்தாண்டு கொரோனோ காரணமாக போட்டிகள் நடத்துவது கேள்விக் குறியாக இருந்தது. இதனிடையே குழந்தைகள் ஏமாற்றம் அடைய கூடாது என்று அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றி இதுபோன்று சிறிய சிறிய போட்டிக்களை நடத்தி வருகிறோம்" என்று கூறினார்கள்.
செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.