Home /local-news /

நாமக்கல்: 11-ம் வகுப்பு மாணவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை!

நாமக்கல்: 11-ம் வகுப்பு மாணவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை!

நாமக்கல்:

நாமக்கல்: 11-ம் வகுப்பு பள்ளி மாணவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை!

Namakkal : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பாளையம் என்ற ஊரில் அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து  தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பாளையம் என்ற ஊரில் அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகனான ரிதுன் இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவன் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார்.

    அப்போது மாணவர் ரிதுனை பள்ளி ஆசிரியை ஒருவர் திட்டியதாக கூறுகிறார்கள். மேலும், பள்ளிக்கு வெளியே அவரை நிற்க வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரிதுன், பள்ளிக்கு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து அறிந்த ரிதுனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டு ரிதுன் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இச்சம்பவம் குறித்து வெப்படை காவல்துறை மற்றும் ஈரோடு ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ரிதுன் தற்கொலை செய்துகொண்டதில் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் கிராம மக்கள், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ரிதுனின் குடும்பத்துக்கு நிவாரணம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் இல்லையென்றால் ரிதுனின் உடலை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி மாணவரின் தற்கொலைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் சமாதானம் அடைந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து காவல் துறையினர் ரிதுனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபோன்று பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் விபரீத முடிவுகளை எடுக்காமல் உரிய அதிகாரிகளிடம் அல்லது பெற்றோர்களிடம் தெரிவித்து, அதற்கான தீர்வுகளை காண முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் தற்கொலை என்பது என்றைக்கும் அது தீர்வு அல்ல, அது ஒரு கோழைத்தனம். நம் பெற்றோர் மற்றும் சுற்றி உள்ளவர்களை என்றைக்கும் நினைத்து பார்க்க வேண்டும்.

    -----------------------------------------------------------------------------------------------

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Suresh V
    First published:

    Tags: Commit suicide, Namakkal, Train

    அடுத்த செய்தி