Home /local-news /

ஆரோக்கியம்தான் டார்கெட்... வேறலெவல் மார்க்கெட் - மதுரையை கலக்கும் 'யாதும்' சந்தை!

ஆரோக்கியம்தான் டார்கெட்... வேறலெவல் மார்க்கெட் - மதுரையை கலக்கும் 'யாதும்' சந்தை!

ஆரோக்கியம்தான்

ஆரோக்கியம்தான் டார்கெட்... வேறலெவல் மார்க்கெட் - மதுரையை கலக்கும் 'யாதும்' சந்தை

Yaadhum Sandhai: இயற்கைக்கும், மனிதனுக்கும் கேடாகாத வகையில் உணவு, உடை, அத்தியாவசியத்தை ஏற்படுத்திக் கொள்வதே இந்த யாதும் சந்தையின் நோக்கம்.

  ன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக சில குடும்ப நண்பர்கள் ஒன்றிணைந்து வீட்டு உணவுத் தயாரிப்புகளை விற்பதில் தொடங்கியது இந்த யாதும் சந்தையின் புள்ளி. மாதத்திற்கு ஒரு சந்தை என இப்போது ஏழாவது சந்தை நடந்துள்ளது.

  இயற்கைக்கும், மனிதனுக்கும் கேடாகாத வகையில் உணவு, உடை, அத்தியாவசியத்தை ஏற்படுத்திக் கொள்வதே இந்த யாதும் சந்தையின் நோக்கம். அதனை அழகாக முன்னெடுத்து செல்கிறார்கள் இந்த யாதும் குழுவினர்.

  மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் தங்களோடு பயணிக்க விரும்பும் சிறிய அமைப்புகள், உணவு தயாரிப்பு சிறு நிறுவனங்கள், நண்பர்கள் என கைகோர்த்து வளர்கிறது 'யாதும்'. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களில் சந்தை நடக்கும். இம்முறை அண்ணா நகர் செல்லமுத்து டிரஸ்ட் வளாகம்.

  தினை கருப்பட்டி மைசூர்பாகு, முந்திரி கருப்பட்டி மைசூர்பாகு, நிலக்கடலை கருப்பட்டி மைசூர்பாகு, கருப்புகவுனி குக்கீஸ், தினை மாவு குக்கீஸ், கம்பு கருப்பட்டி குக்கீஸ், கேழ்வரகு முந்திரி குக்கீஸ்,
  மைதா, கோதுமை இல்லாமல் கேக். கேழ்வரகு பிரவுனி கேக். முட்டை கலந்த வகையும், முட்டை கலக்காத வகையும் என மைதா, டால்டா, ரீபைண்டு ஆயில், பாமாயில், அஜினோ மோட்டோ எதுவும் கலக்காமல் இவற்றை தயாரிக்கிறார்கள்.

  வரகு முறுக்கு, தினை முறுக்கு, தினை லட்டு, ராகி அல்வா, கம்பு இனிப்பு கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டை, தூய மல்லி அரிசி பணியாரம், மாங்காய் சட்னி, தக்காளி காரச் சட்னி... இவை அனைத்தையும் எண்ணெய் சேர்க்காமல் தயாரிக்கிறார்கள்.

  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியத்திற்கு உட்கொள்ள முளைகட்டிய சிறுதானிய சத்துமாவு விற்கப்படுகிறது. வயிற்றுக்கு ஈவதோடு, செவிக்கு ஈவதற்கு புத்தக விற்பனையும் நடக்கின்றன.

  நாம் சென்றிருந்தபோது, நிலக்கடலையில் கடலைமிட்டாய் சமைத்து காட்டிக் கொண்டிருந்தார்கள். பீட்ரூட், கேரட், பாவக்காய், தூதுவளை, திணை ஆகியவற்றில் அப்பளம் தயாரிக்கிறார்கள்.

  யாதும் சந்தை நடைபெற்ற செல்லமுத்து டிரஸ்ட்டில், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு மூளைவளர்ச்சி பயிற்சியாக தின்பண்டங்கள் தயாரிப்பு கற்றுக் கொடுக்கப்படுகிறது. குக்கீஸ், பிரட்டு, பன், கேக் என எல்லாம் தயாரித்து மனநலம் பிறழ்ந்தவர்கள் கற்றுத்தேற இந்த டிரஸ்ட் வழிசெய்கிறது.

  ஜெர்சி உள்ளிட்ட மற்ற ரகப் பசு நெய்களைத் தவிர்த்து அசல் நாட்டுப் பசு நெய் விற்கிறார்கள். மற்ற செக்கில் ஆட்டும் போது சூடு உற்பத்தியாகும் என்பதால் வாகை மரச்செக்கு எண்ணெய் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. அதனை 'யாதும்' சந்தைப் படுத்தியுள்ளது.

  கைப்பை, மணிபர்ஸ் உள்ளிட்ட அத்தியாவசியங்களும் ரசாயன சாயப் பூச்சுகள் இன்றி மாடர்ன் டிரெண்டுக்கு ஏற்ப டிசைன் செய்த இயற்கை கழிவுப் பொருகள் கொண்டு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

  கொரோனாவால் சில மாதங்கள் தடைபட்டிருந்தாலும், தளர்வுகளால் தற்போது மீண்டும் ஒருங்கிணைப்பாளர் செல்வாவும் அவர்களது குழுவும் தங்கு தடையின்றி புறப்பட்டுள்ளனர். உணவே மருந்து என இவர்கள் இதையும் சேர்த்து சொல்கிறார்கள் 'யாதும்' ஊரே, யாவரும் கேளிர் என!

  செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
  Published by:Arun
  First published:

  Tags: Madurai

  அடுத்த செய்தி