Home /local-news /

தமிழக அரசின் குடியரசு தினவிழா அலங்கார ஊர்தி மதுரை வருகை

தமிழக அரசின் குடியரசு தினவிழா அலங்கார ஊர்தி மதுரை வருகை

தமிழக அரசின் குடியரசு தினவிழா அலங்கார ஊர்தி மதுரை வருகை

தமிழக அரசின் குடியரசு தினவிழா அலங்கார ஊர்தி மதுரை வருகை

Madurai News | மதுரைக்கு வருகிற இந்த முதல் அலங்கார ஊர்தியில் பல்வேறு வரலாற்றுக் காட்சிகள் தத்ரூபமாக இடம்பெற்றுள்ளன.

    டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஊர்தி சென்னையில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றது. மேலும், சென்னையில் பங்கேற்ற மூன்று அலங்கார ஊர்திகள் மதுரை உள்ளிட்ட மூன்று நகரங்களுக்கு மக்கள் பார்வைக்காக அனுப்பி வைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி, முதலாவது அலங்கார ஊர்தி மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு வருகிற இந்த முதல் அலங்கார ஊர்தியில் பல்வேறு வரலாற்றுக் காட்சிகள் தத்ரூபமாக இடம்பெற்றுள்ளன.

    ஊர்தியின் முகப்பில், வேலூர் கோட்டையில் 1806ம் ஆண்டு நடை பெற்ற சிப்பாய்ப் புரட்சியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமுடன் போர் புரிந்த மருது சகோதரர்கள், சிவகங்கையை மீட்ட வீரமங்கை வேலு நாச்சியார் ஆகியோர் உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

    மேலும், வெள்ளையர்களின் ஆயுதக் கிடங்கை அழித்து தன்னுயிரைத் தியாகம் செய்த வீராங்கனை குயிலி, ஆங்கிலேயர்களின் ஆட்சி எதிர்த்து முதன் முதலில் போரிட்டுத் தூக்கு கயிற்றை வீரமுடன் ஏற்றுக்கொண்ட விடுதலைப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியவை வடிவமைக்கப்பட்டு உள்ளன.

    கட்டபொம்மன் படையில் தளபதியாக விளங்கிய தூத்துக்குடி மாவட்ட கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கம், அன்னியப் படைகளை தனியாகச் சென்று அழித்த ஒண்டிவீரன், மாவீரன் பூலித்தேவன், மாவீரன் அழகு முத்துக்கோன் ஆகியோரின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன.

    மருது சகோதரர்கள் உருவாக்கிய காளையார் கோயில் கோபுரம் என கண்களைக் கவரும் வகையிலும் நேரில் தோன்றுவது போன்ற உணர்வு ஏற்படும் வகையிலும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் உயிருடன் காட்சி தரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த அலங்கார ஊர்தி இன்று மதுரை தெப்பக்குளத்தில் நிறுத்தப்பட உள்ளது. இன்று முதல் மக்கள் பார்வைக்கு அந்த அலங்கார ஊர்தி நிற்கும். இந்தத் தகவலை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் நேற்று நிருபர்களிடம் கூறினார்.

    மேலும், ஊர்தி மதுரை நகருக்கு வருகிற வழியில் கொட்டாம்பட்டி, மேலூர், ஒத்தக்கடை, விரகனூர் பகுதியில் வரவேற்பு கொடுக்கப்பட்டு, வண்டியூர் தெப்பக்குளம் பகுதியில் ஜன.,29 நாளை முதல் 31ம் தேதி வரை பொதுமக்களுக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளது எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Vijay R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி