Home /local-news /

கொரோனாவால் நடக்காத மதுரை தெப்பத் திருவிழா... பொதுமக்கள் ஏமாற்றம்!

கொரோனாவால் நடக்காத மதுரை தெப்பத் திருவிழா... பொதுமக்கள் ஏமாற்றம்!

மதுரை

மதுரை தெப்பக்குளம்

இரண்டாண்டுகள் சித்திரைத்திருவிழா தடைபட்டு இருந்தபோதும்கூட மாரியம்மன் கோவில் தெப்பக் குளத்தில் தெப்பத் திருவிழா தடைபடாமல் நடைபெற்றது.

    ண்டுதோறும் தைப்பூசத்தை ஒட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் நடைபெறும்.

    இந்த ஆண்டு ஜனவரி 18 அன்று வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா நடைபெற இருந்தது. கொரோனா தீவிர பரவல் காரணமாக மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அமைந்துள்ள பொற்றாமரைக் குளத்தில் சிறியளவில் தெப்பம் செய்து உள்திருவிழாவாக தெப்பத் திருவிழா நடைபெற்றது.

    இரண்டாண்டுகள் சித்திரைத்திருவிழா தடைபட்டு இருந்தபோதும்கூட மாரியம்மன் கோவில் தெப்பக் குளத்தில் தெப்பத் திருவிழா தடைபடாமல் நடைபெற்றது. ஆனால் தற்போது பெருகி வருகிற கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக தெப்பத் திருவிழா நடைபெறவில்லை.

    இது குறித்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனர். இருப்பினும், மக்களின் நம்மை கருதியே இந்தக் கட்டுப்பாடுகள் என்பதால் ஏற்றுக் கொள்வதாகவும், அடுத்தாண்டு வழக்கம் போல் நடைபெற உள்ள தெப்பத் திருவிழாவை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்தனர் மக்கள்.'

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Vijay R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி