மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியருக்கு மகளிர் தினத்தை ஒட்டி கலைஞர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இன்று உலக மகளிர் தினத்தையொட்டி நாடெங்கிலும் மகளிர்தினக் கொண்டாட்டம் நடைபெற்று வருகின்றன. அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் வருகை புரிந்த ஆட்சியர் அனீஷ்சேகருக்கு சிறப்பான வரவேற்பு தரப்பட்டது. நாட்டுப்புறக் கலைஞர் கோவிந்தராஜன் கலைக்குழுவைச் சேர்ந்த இளம்பெண் கலைஞர்கள் தங்கள் கலைத் திறமைகளை வெளிக்காட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிலம்பம் உள்ளிட்டவற்றை சுழற்றி தப்பாட்டம் கரகாட்டம் ஆடி ஆட்சியரையும் அதிகாரிகளையும் மாணவிகள் உற்சாகப்படுத்தினார் . பின்னர் மாணவிகள் ஆட்சியரோடு இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.