Home /local-news /

திருப்புவனம் : கட்டுப்பாடு இழந்த கார் கரன்ட் கம்பம் மீது மோதி விபத்து

திருப்புவனம் : கட்டுப்பாடு இழந்த கார் கரன்ட் கம்பம் மீது மோதி விபத்து

இந்த

இந்த விபத்தால் மின்கம்பம் சரிந்ததால் சில வீடுகளில் மட்டும் மின் விநியோகம் தடைபட்டது. மின் ஊழியர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அதனை சரிசெய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

இந்த விபத்தால் மின்கம்பம் சரிந்ததால் சில வீடுகளில் மட்டும் மின் விநியோகம் தடைபட்டது. மின் ஊழியர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அதனை சரிசெய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

    துரை சிலைமானை அடுத்த திருப்புவனத்தில் நகருக்குள் வேகமாக வந்த கார் ஒன்று வந்த வேகத்தில் தெருவுக்குள் திரும்பியதில் கட்டுப்பாடிழந்து மின்கம்பத்தில் மோதியது. மோதிய வேகத்தில் மின்கம்பம் சரிந்தது. நல்வாய்ப்பாக எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. காரை 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஓட்டி வந்துள்ளார்.

    இந்த விபத்தால் மின்கம்பம் சரிந்ததால் சில வீடுகளில் மட்டும் மின் விநியோகம் தடைபட்டது. மின் ஊழியர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அதனை சரிசெய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். விபத்து நடந்த உச்சிமாகாளி கோயில் தெரு பகுதியில் சில மணிநேரத்திற்கு போக்குவரத்து தடை ஏற்பட்டது.

    தெருமுனை பேக்கரி அருகே நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்களும் மோதி சாய்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் விபத்து தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என்பதால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என திருப்புவனம் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Vijay R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி