Home /local-news /

மதுரை : ரிங்ரோடு ஸ்மார்ட் சிட்டி சாலை இணைப்பு பகுதி - விபத்து ஏற்படுத்தும் அபாயம்!

மதுரை : ரிங்ரோடு ஸ்மார்ட் சிட்டி சாலை இணைப்பு பகுதி - விபத்து ஏற்படுத்தும் அபாயம்!

Madurai

Madurai News | தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் அமைப்பு முறை மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது.

Madurai News | தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் அமைப்பு முறை மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது.

    துரை விரகனூர் ரிங்ரோடு பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் வைகை பைபாஸ் ரோடு போடப்பட்டுள்ளது. இந்த வழி பைபாஸ் ரோடு மதுரை விரகனூர் ரிங் ரோடு சந்திக்கும் பகுதியில் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் அமைப்பு முறை மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது.

    ரிங்ரோட்டில் இருந்துவரும் வாகனங்கள் தெப்பக்குளம் நோக்கி சென்று சில மீட்டர் தூரம் பயணித்த பிறகு அந்த குறுகலான பகுதியில் யூடர்ன் அடித்து மீண்டும் சில மீட்டர் தூரம் விரகனூர் ரிங்ரோடு நோக்கிச் சென்று தொடர்ந்து இடது புறம் திரும்பி பைபாஸ் சாலையை அடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் தெப்பக்குளம் நோக்கி செல்லும் பழைய சாலையிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிற சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வைகை பைபாஸ் சாலைக்குள் நுழைய இடதுபுறம் திரும்புகிற வாகனங்கள் மிகவும் குறுகலான வளைவாக இருப்பதால் விபத்து ஏற்படக் கூடிய சூழலும் உருவாகியுள்ளது.

    இதேபோல, வாகனங்கள் சுற்றிச் செல்வதை தவிர்க்கும் பொருட்டு எதிர்திசையில் வாகனங்களை செலுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனால், இரவு நேரங்கள் மற்றும் போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ள நேரங்களில் மிகப்பெரிய விபத்து நடப்பதற்கான வாய்ப்பபும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    எனவே, ஏற்கனவே இருக்கின்ற விரகனூர் சுற்றுச்சாலை பகுதிக்கு அருகிலேயே சிறிய அளவிலான சுற்றுச்சாலை ஒன்று அமைக்கப்பட்டால் வாகனங்கள் எளிதாக பைபாஸ் சாலையை அடைய முடியும்; பைபாஸ் சாலையில் இருந்து திரும்ப முடியும் என்பது வாகன ஓட்டிகளின் கருத்து.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Vijay R
    First published:

    Tags: Madurai, Smart City

    அடுத்த செய்தி