டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி
சென்னை குடியரசு தின விழாவில் பங்கேற்றது. அந்த அலங்கார ஊர்தி
மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக தெப்பகுளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான மக்கள் கண்கவர் கலை நிகழ்ச்சிகளையும், அலங்கார ஊர்தியின் அழகையும் ரசித்து மகிழ்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று (ஜனவரி 31) மாலை 4.30 மணியளவில் தெப்பக்குளம் பகுதியில் இருந்து அலங்கார ஊர்தி புறப்பட்டுச் சென்றது. காவல்துறை வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க போக்குவரத்து சிலநிமிடங்கள் தடைசெய்யப்பட்டு விரகனூர் ரிங்ரோடு வழியாக அலங்கார ஊர்தி பயணமானது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.