ஆண்டுதோறும் ரமலான் மாதம் முழுவதும் பகலில் உணவு, நீர் உண்ணாமல், உணவு உள்ளிட்டவற்றை பிறருக்கு பகிர்ந்து இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடிப்பர்.
இந்த மாதத்தின் 27வது தொழுகை நாளான நேற்று லைலத்துல் ஹதர் என்னும் புனித இரவு இஸ்லாமியர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில்தான் குர்ஆனை இறைவன் கொடுத்ததாக இஸ்லாமியர்கள் நம்புகின்றனர்.
இந்த சிறப்பு நாளான நேற்று மதுரை மாப்பாளையம் ஜின்னா திடலில் 2000 பேருக்கு சஹர் விருந்து அளிக்கப்பட்டது. தென்தமிழகத்தில் முதல்முறையாக 2000 பேருக்கு அளிக்கப்பட்ட சஹர் விருந்தில் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது.
இதில் ஏராளமான இஸ்லாமியர்களும் மாற்று மதத்தினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த பிரம்மாண்ட சஹர் விருந்து நள்ளிரவு 2 மணிக்கு தொடங்கி அதிகாலை 4 மணி வரை நடைபெற்றது.விருந்து முடிந்து இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.