Home /local-news /

வேதக் குதிரையில் சம்ஹாரக் கோலம்... ராமாயணச் சாவடியில் இன்று 5ம் நாள் உலா..

வேதக் குதிரையில் சம்ஹாரக் கோலம்... ராமாயணச் சாவடியில் இன்று 5ம் நாள் உலா..

வேதக் குதிரையில் சம்ஹாரக் கோலம்... ராமாயணச் சாவடியில் ஐந்தாம்நாள்

வேதக் குதிரையில் சம்ஹாரக் கோலம்... ராமாயணச் சாவடியில் ஐந்தாம்நாள்

Madurai Chithirai Thiruvizha Series | கவர்ந்து சென்ற செல்வங்களை பூதங்கள் விட்டுச் சென்றன. சிவபக்தர்கள் எதையும் யாரிடத்தும் பெறவேண்டாம், வேண்டியதை ஈசனே அருளுவார் என்பதை விளக்கவே இந்த லீலை.

    தேவார நால்வருள் ஒருவரான சுந்தரர், சேரமான் பெருமான் நாயனாரோடு திருவஞ்சைக்களம் தரிசனம் முடித்து திரும்பினார். அப்போது சுந்தரர் தம் பதிகத்தில் ஆரூராரை எண்ணிப் பாடியதில் இருந்து திருவாரூருக்கு சுந்தரர் செல்ல உள்ளதை உணர்ந்தார்.

    பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுத்தனுப்பினார் சேரமான் நாயனார். தன்னிடம் இருந்து மட்டுமே எதையும் பெறவேண்டும், பிறரிடத்து ஏதும் பெறலாகாது என உணர்த்துவதற்காக சிவபெருமான் பூதகணங்களை வேடர்களாக அனுப்பி சுந்தரர் பெற்றவற்றை கவரச் செய்தார்.

    களவு போகிற ஊரில் எதற்கு இங்கு இருக்கிறீர் ஈசனே எனும் பொருள்பட \"எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே\" பதிகத்தை சுந்தரர் பாடியதும் திருமுருகபூண்டி தலத்தில், கவர்ந்து சென்ற செல்வங்களை பூதங்கள் விட்டுச் சென்றன. சிவபக்தர்கள் எதையும் யாரிடத்தும் பெறவேண்டாம், வேண்டியதை ஈசனே அருளுவார் என்பதை விளக்கவே இந்த லீலை.

    இதையும் படிங்க:  சொக்கருக்கு பெயர் 'ரா தங்கார்'... ஆலய நடைசாத்தும் அதிகார நந்தி..

    வேடர் கோலத்தில் பூதகணங்கள் வந்து பொருள்களை பறித்துச் சென்ற வேடர்பறி லீலை, இந்த ஐந்தாம்நாள் உற்சவத்தில் வாசிக்கப்படும். காலையில் கோயிலில் இருந்து வடக்குமாசிவீதி ராமாயணச் சாவடிக்கு எழுந்தருளும் எம்பிரானும் எம்பிராட்டியும் மாலை குதிரை வாகனங்களில் திரும்புவர்.

    சங்கரன் வருவது சாதாரணக் குதிரையா... வேதக் குதிரை. நரியைப் பரியாக்கிய லீலையில் குதிரைக்காரனாக வரும் ஈசன் அமர்ந்து சவாரிசெய்த வேதக் குதிரை. ஆகமம், பிரணவம், உபநிடதம் உள்ளிட்டவற்றை உறுப்புகளாக கொண்ட வேதக் குதிரையில் வேதநாயகன் பவனி. அன்னையும் வருகிறாள் இன்னொரு குதிரையில். இந்த குதிரை வாகனம் சம்ஹாரக் கோலம் என்பர்.

    இதையும் படிங்க:    வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படி.. இருவர் தொண்டால் ஊருக்கே கிடைத்த பாக்கியம்..!!

    நான்காம் நாளைப் போல அல்லாமல் இந்த ஐந்தாம் நாள் மாசிவீதி வலம் உண்டு என்றாலும் காலையில் மாசிவீதிகள் வழக்கம்போல் சுற்றிவந்து வடக்குமாசிவீதி ராமாயணச் சாவடியில் தங்கும் உற்சவர்கள், மாலையில்தான் புறப்பாடாகி மீதமுள்ள மாசிவீதிகளான வடக்குமாசிவீதி கீழமாசிவீதிப் பகுதியை வலம் வந்து கோயிலடைகின்றனர்.

    இதையும் படிங்க:   கயிலாய பர்வத வாகனம்.. நசுக்கிய ஈசனை மயக்கிய ராவணன்... 3ம் நாள் தரிசித்தால் இந்திரலோக வாழ்வு!

    என்ன இது, நாள் முழுக்க உற்சவர்கள் கோயிலுக்கு வெளியே மண்டகப்படியாகி தங்குகின்றனரா... மீனாட்சிக் கோயிலில் ஆண்டிற்கு ஏழுநாள்கள் முழுநாளும் உற்சவர் கோயிலுக்கு வெளியே பயணித்து மண்டகப்படி தங்கி திரும்புகிறார். இதில் அதிகார நந்தி புறப்பாடும் அடக்கம். அதிகார நந்திக்கும் உற்சவத்துக்கும் தொடர்பு என்ன?

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai, Madurai Chithirai Festival

    அடுத்த செய்தி