Home /News /local-news /

மாடக்குளம் : கண்மாயில் நண்பர்களோடு குளித்த இளைஞர் சடலமாய் மீட்பு - பொங்கலன்று நேர்ந்த சோகம்!

மாடக்குளம் : கண்மாயில் நண்பர்களோடு குளித்த இளைஞர் சடலமாய் மீட்பு - பொங்கலன்று நேர்ந்த சோகம்!

Madurai News | மூன்று மணி நேரத் தேடலுக்குப் பிறகு கண்ணனின் சடலம் மீட்கப்பட்டது. உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கூலித்தொழிலாளி பெரியசாமி மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர். இவரது கடைசி மகன் கண்ணன். சுமார் 28 வயது நிரம்பிய இளைஞரான இவர் பொங்கல் தினமான ஜன.,14 காலை நண்பர்களுடன் மாடக்குளம் கண்மாய்க்குக் குளிக்க சென்றுள்ளார்.

    தனது நண்பர்களுடன் விளையாடி நீச்சலடித்தபடியே கண்ணன் ஆழமான பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. நீண்டநேரம் ஆகியும் கண்ணன் வெளியில் வராததால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கண்ணன் மூழ்கியிருக்கலாம் என சந்தேகித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து, தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மதுரை பொறுப்பு நிலைய அலுவலர் தயாளக்குமார் தலைமையிலான தீயணைப்புத்துறை குழுவினருடன் கிராமத்து இளைஞர்கள் 20-க்கும் மேற்பட்டோர் இணைந்து, நீரில் மூழ்கியதாக சந்தேகிக்கப்பட்ட கண்ணனைத் தேடத் தொடங்கினர்.

    மூன்று மணி நேரத் தேடலுக்குப் பிறகு கண்ணனின் சடலம் மீட்கப்பட்டது. உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மதுரைஎஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தைப்பொங்கல் தினமான இன்று கண்மாயில் நண்பர்களோடு பண்டிகை மகிழ்ச்சியில் குளிக்கச் சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Vijay R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி