Home /local-news /

மதுரையில் எந்தெந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு... எவ்வளவு?

மதுரையில் எந்தெந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு... எவ்வளவு?

மதுரையில்

மதுரையில் எந்தெந்த சுங்கச்சாவடிகளில் எவ்வளவு கட்டண உயர்வு?

Madurai Toll gates : நாடு முழுவதும் பல்வேறு டோல்கேட்களில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மிகவும் முக்கியமான இரண்டு டோல்கேட்களிலும் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

    நாடு முழுவதும் பல்வேறு டோல்கேட்களில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மிகவும் முக்கியமான இரண்டு டோல்கேட்களிலும் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

    மதுரையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் நெடுஞ்சாலையில் (நெடுஞ்சாலை எண் 44) திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி நள்ளிரவு முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. இலகுரக வாகனங்கள் முதல் மிக கனரக வாகனங்களுக்கு கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.

    ஒருமுறை பயணம் செய்ய பழைய கட்டணத்தைவிட கூடுதலாக 10 ரூபாய் முதல் 55 ரூபாய் வரையிலும், இருமுறை பயணத்திற்கு 15 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையிலும் மாதாந்திர கட்டணத்தில் 290 ரூபாய் முதல் 1860 ரூபாய் வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதே போல, மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியிலும் கட்டண உயர்வு அமலாகியுள்ளது. மதுரை - திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள முதல் சுங்கச்சாவடியான இதில் வாகனங்களுக்கு 10 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல உள்ளூர் வாகனங்களுக்கு மாதந்திர கட்டண பாஸின் விலையும் 30 ரூபாய் உயர்த்துள்ளது. மிகவும் பரபரப்பான இந்த நெடுஞ்சாலைகளில் கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் கடுகடுப்புடன் சுங்கச் சாவடியை கடந்து செல்வதை காண முடிந்தது.

    இதேபோல மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், உள்ள சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சுங்கச் சாவடியிலும் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Suresh V
    First published:

    Tags: Madurai, Toll gate

    அடுத்த செய்தி