Home /local-news /

மதுரை வழியாக மைசூரு - திருவனந்தபுரம் இடையிலான பொங்கல் சிறப்பு ரயில்- பயண விவரங்கள் 

மதுரை வழியாக மைசூரு - திருவனந்தபுரம் இடையிலான பொங்கல் சிறப்பு ரயில்- பயண விவரங்கள் 

பொங்கல் ஸ்பெஷல் : மைசூரு - திருவனந்தபுரம் இடையிலான ரயில் பயண விவரங்கள் 

பொங்கல் ஸ்பெஷல் : மைசூரு - திருவனந்தபுரம் இடையிலான ரயில் பயண விவரங்கள் 

பொங்கலையொட்டி சொந்த ஊர்களுக்குப் பயணிக்கும் மக்களின் வசதிக்காக மதுரை வழியே மைசூரு - திருவனந்தபுரம் இடையில் சிறப்பு ரயில் (ஜன.,12 )இன்று இயக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பொங்கலையொட்டி சொந்த ஊர்களுக்குப் பயணிக்கும் மக்களின் வசதிக்காக மதுரை வழியே மைசூரு - திருவனந்தபுரம் இடையில் சிறப்பு ரயில் (ஜன.,12 )இன்று இயக்கப்படுகிறது.  மைசூருவில் இருந்து ஜன.,12 மதியம் 12:05 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு கட்டண ரயில் (06201) நாளை (ஜன.,13) காலை 7.30 மணியளவில் திருவனந்தபுரம் சென்று சேர்கிறது.

    இந்த ரயில் முதல் நாள் (ஜன.,12 ) அன்று பின்வரும் நிலையங்களில் நின்று செல்லும். மாண்டியா 12.34/12.35, கெங்கேரி 13.35/13.36, பெங்களூரு 14.05/14.15, கண்டோன்மென்ட் 14.25/14.27, ஒசூரு 15.27/15.29, தர்மபுரி 17.30/17.32, சேலம் 19.25/19.30, நாமக்கல் 20.05/20.07, கரூர் 20.38/20.40, திண்டுக்கல் 22.30/22.40.

    தொடர்ந்து மறுநாள் ஜன., 13 அதே ரயில் பின்வரும் நிலையங்களில் நிற்கும். மதுரை 00.15/00.20, விருதுநகர் 02.28/02.30, கோவில்பட்டி 03.13/03.15, திருநெல்வேலி 04.30/04.35, நாகர்கோவில் டவுன் 05.58/06.00.

    அதேபோல மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து நாளை (ஜன., 13) காலை 10:30 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (06202) நாளை மறுநாள் ஜன.,14 வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு மைசூரு செல்லும்.

    இந்த ரயில் முதல் நாள் நாகர்கோவில் டவுன் ஸ்டேஷன் 12.05/12.07, திருநெல்வேலி 14.00/14.05, கோவில்பட்டி 14.23/14.25, விருதுநகர் 15.18/15.20, மதுரை 16.10/16.15, திண்டுக்கல் 17.40/17.45, கரூர் 19.13/19.15, நாமக்கல் 19.47/19.48, சேலம் 20.45/20.50, தர்மபுரி 22.05/22.07

    தொடர்ந்து மறுநாள் ஒசூரு 00.20/00.22, கண்டோன்மென்ட் 01.35/01.37, பெங்களூரு 02.00/02.05, கெங்கேரி 02.23/02.25, மாண்டியா 03.23/03.25. இந்த ரயில்களுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Vijay R
    First published:

    Tags: Madurai, Pongal

    அடுத்த செய்தி