மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கடந்த மார்ச் 8 தொங்கி பங்குனி உற்சவ பெருவிழா நடக்கிறது. முக்கிய நிகழ்வான முருகன் தெய்வானை திருமணம் இன்று (மார்ச் 21) மதியம் 12.45 மணியில் இருந்து 1.15 மணிக்குள் நடக்கிறது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி திருப்பரங்குன்றம் செல்கின்றனர். ஆண்டுதோறும் நடக்கும் இந்நிகழ்வை ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலும் திரண்டு வந்து தரிசிப்பர்.
அதன்படி இன்று அதிகாலை 4 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தீபாராதனை முடிந்து கோயிலில் இருந்து புறப்பட்டார். திருக்கல்யாணம் முடிந்து நள்ளிரவு திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்பட்டு கோயிலை வந்தடைகின்றனர்.
நாள் முழுவதும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றத்தில் அருள்பாலிக்க உள்ளதால் இன்று (மார்ச் 21) மீனாட்சி கோயிலில் நடை சாத்தப்பட்டிருக்கும். அம்மன் சுவாமி சன்னதி தரிசனம் கிடையாது.
பக்தர்கள் வழக்கம் போல, ஆயிரங்கால் மண்டபம் மற்றும் ஆடிவீதியில் தரிசனங்கள் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகனின் திருக்கல்யாணக் கோலத்தைக் காண்பதற்கு தாயும் தந்தையும் பயணிக்கும் கண்கொள்ளாக் காட்சி காண மதுரை தயாராகி உள்ளது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.