Home /local-news /

மதுரை : ஆதரவற்ற வீதி நாய்களுக்கு நேசத்தாயான ரூபசுந்தரி!

மதுரை : ஆதரவற்ற வீதி நாய்களுக்கு நேசத்தாயான ரூபசுந்தரி!

மதுரை

மதுரை : ஆதரவற்ற வீதி நாய்களுக்கு நேசத்தாயான ரூபசுந்தரி!

மனிதர்களால் அடித்துவிரட்டப்பட்ட, விபத்துக்குள்ளான, நோய்வாய்ப்பட்ட தெருநாய்களை மீட்டுக் கொண்டு வந்து பாதுகாக்கிறார்  சமூக செயற்பாட்டாளர் ரூபசுந்தரி. குணமானதும், கேட்போருக்குத் தத்துக் கொடுக்கிறார். மொத்தம் தற்போது 35 நாய்கள் வரை இவரது குடும்பத்தின் அரவணை?

மேலும் படிக்கவும் ...
    னிதர்களால் அடித்துவிரட்டப்பட்ட, விபத்துக்குள்ளான, நோய்வாய்ப்பட்ட தெருநாய்களை மீட்டுக் கொண்டு வந்து பாதுகாக்கிறார் சமூக செயற்பாட்டாளர் ரூபசுந்தரி. குணமானதும், கேட்போருக்குத் தத்துக் கொடுக்கிறார். மொத்தம் தற்போது 35 நாய்கள் வரை இவரது குடும்பத்தின் அரவணைப்பில் உள்ளன.

    மதுரை மாநகரில் எங்கெல்லாம் நாய்கள் வீதியில் ஆதரவற்று கிடந்தாலும் அவற்றை எடுத்து மருத்துவம் செய்து ஆரோக்கியமாகும்வரை பொறுப்பில் வைத்திருந்து தத்தெடுக்கக் கேட்போருக்கு வழங்குகிறார். இதற்காக பொய்கைகரைப்பட்டி கிராமம் அருகே தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான இடத்தை மொத்தமாக நாய்களின் வாழ்வுக்காக அர்ப்பணித்து உள்ளார்.

    தனது மகளின் உந்துதலால்தான் நாய்களின் அன்பைப் புரிந்துகொள்ள முடிந்ததாகவும், இந்த சேவைக்கு தனது கணவர் முழுமையான ஒத்துழைப்பு தருவதாகவும் கூறுகிறார், நேசத்தாய் ரூபசுந்தரி. பொய்கைகரைப் பட்டியில் 15 நாய்களும், கணவர் கிருஷ்ணமூர்த்தியின் ஆஸ்டின்பட்டி அலுவலக கட்டிடத்தில் 20 நாய்களும் வளருகின்றன.

    நாய்களின் இனத்தை பாதுகாக்கும் சட்டம் இயற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறார். தெரு நாய்களின் குட்டிகளை தாயிடம் இருந்து பிரித்துவிட்டால் அவற்றிற்கு ஏற்படும் பார்வோ என்ற நோயிலிருந்து அந்தக் குட்டிகளைக் காப்பாற்றவே முடியாது. எனவே குட்டி ஈன்ற தெருநாய்களை பத்திரப்படுத்தினாலே போதும் குட்டிகள் வளர்ந்து விடும் என்கிறார்.

    இவரிடம் உள்ள நாய்கள் விபத்தில் அடிபட்டது, மனிதர்களால் தாக்கப்பட்டது என பல்வேறு கொடுமைகளில் இருந்து மீட்டெடுக்கப்பட்டு வந்தவை. பாம்பு பிடிக்கும் நாய், தலைமை ஏற்கும் நாய், பாசத்தில் மிஞ்சும் நாய் என்று விளக்கிச் சொல்லி ரசிக்கிறார்கள் அந்தக் குடும்பத்தினர். நாய்களை துன்புறுத்தாமல் அன்பு செலுத்தினால் அவை மனித மொழியை புரிந்து நடந்து கொள்ளும் என்கிறார் ரூபசுந்தரி.

    செய்தியாளர் : முத்துக்குமரன், மதுரை
    Published by:Alagesan R
    First published:

    Tags: Dog, Madurai

    அடுத்த செய்தி