மதுரை விரகனூரில் பொதுப் பாதையை அடைத்து கேட் அமைத்த வீட்டு ஓனருக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள் அதிரடியாக அந்த கேட் தடுப்பை அகற்றினர்.
மதுரை விரகனூர் பாலாஜி நகர் பகுதியில் தனி நபர் ஒருவர் பொதுப் பாதையை மறைத்து இரும்பு கேட் அமைக்கத்திருந்தார். இதனால், அந்த பகுதி பொதுமக்கள் சாலையை கடந்து பயணிப்பதில் சிரமம் இருந்துள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார்மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (மே 5) திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அதிகாரி ராமர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் கொண்ட குழு ஜேசிபி இயந்திரத்துடன், புகார் கூறப்பட்ட பகுதிக்கு வந்தனர்.
பொதுமக்களுக்கு இடையூறாக அங்கே அமைக்கப்பட்ட 10 அடி உயர இரும்பு கேட்டை ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தினார். மேலும் இனிவரும் காலங்களில் இரும்புகேட் அமைத்தால் வழக்கு பதியப்படும் என வீட்டின் உரிமையாளருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.