மதுரை பெருங்குடியை சேர்ந்த சுரேஷ், பொன்மேனி பிஆர்சி டிப்போ கிளர்க்காக பணியாற்றுகிறார். இவரது மனைவி தனமாலினி 43 வயது. இருவரும் டூவீலரில்
பெரியார் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மேலஉப்பிலிகுண்டு சென்று பெரியார் நிலையம் திரும்பி கொண்டிருந்தது ஒரு நகரப் பேருந்து. பேருந்தின் ஓட்டுநர் முத்துராமன் வில்லாபுரம் வெற்றி திரையரங்கம் அருகே பேருந்தை இயக்கிக் கொண்டு வந்தார்.
அப்போது சுரேஷ் பேருந்தை முந்திச் செல்ல முயன்றார். இதில் நிலைகுலைந்த டூவீலரிலிருந்து தனமாலினி பக்கவாட்டில் விழுந்து, பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே தனமாலினி பலியானார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல் ஆய்வாளர் தங்கப்பாண்டி, தனமாலினி உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தார். சம்பவம் குறித்து போக்குவரத்து துணை ஆணையர் திருமலைகுமார் விசாரணை நடத்தினார்.
கணவர் கண்முன்னே மனைவி பேருந்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த தம்பதிக்கு கல்லூரி பயிலும் மகளும் மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை.
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.