Home /local-news /

மதுரை - தெப்பக்குளம் படகு சவாரி : அலாதியான அனுபவம்

மதுரை - தெப்பக்குளம் படகு சவாரி : அலாதியான அனுபவம்

மதுரை

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் பகுதியில் தினமும் காலை முதல் மாலை வரை படகு சவாரி நடக்கிறது. அந்த அனுபவத்தை நேரடியாக அறிந்து பகிரப் புறப்பட்டோம்.

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் பகுதியில் தினமும் காலை முதல் மாலை வரை படகு சவாரி நடக்கிறது. அந்த அனுபவத்தை நேரடியாக அறிந்து பகிரப் புறப்பட்டோம்.

    துரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் பகுதியில் தினமும் காலை முதல் மாலை வரை படகு சவாரி நடக்கிறது. அந்த அனுபவத்தை நேரடியாக அறிந்து பகிரப் புறப்பட்டோம்.

    தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை படகு சவாரி நடக்கிறது. சுமார் 5 வயதுக்கு மேற்பட்ட நபருக்கு ரூ.20 கட்டணம். தரப்படுகிற லைஃப் ஜாக்கெட் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும்.

    பகல் தவிர மற்ற நேரங்களில் தெப்பக்குளத்தில் அலைகள் அதிகம் என்பதால் படகு சவாரி இந்த இடைப்பட்ட பகல் நேரத்தில் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. பெரிய படகு மட்டும் சவாரிக்கு உள்ளது. இதில் 9 பேர் அமரலாம். மைய மண்டபத்தை ஒருமுறை சுற்றிவர 4 நிமிட நேரமாகிறது. குளு,குளு குளத்துக் காற்று, மதிய வெயிலிலும் இதமாக வீச, நீரின் சலசலப்பு இதம் கூட்டும்.

    படகில் வலம் வந்தபடியே மைய மண்டபத்தைப் பார்ப்பதற்கு முப்பரிமாணக் காட்சி போல மாய பிம்பம் கிடைக்கும். அலாதியான படகு பயணம், தெப்பக்குளம் பகுதிக்கு மட்டுமல்ல, மதுரை மாவட்ட மக்களுக்கும் சிறந்த ரிலாக்ஸ் டைம் தான்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி