மதுரை மார்க்க எக்ஸ்பிரஸ்கள் நெல்லையில் பகுதியாக ரத்து
மதுரை மார்க்க எக்ஸ்பிரஸ்கள் நெல்லையில் பகுதியாக ரத்து
மதுரை மார்க்க எக்ஸ்பிரஸ்கள் நெல்லையில் பகுதியாக ரத்து
வள்ளியூர் - ஆரல்வாய்மொழி ரயில்நிலையங்களுக்கு இடையில் இரட்டை ரயில்பாதை இணைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக, அந்த பகுதி ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வள்ளியூர் - ஆரல்வாய்மொழி ரயில்நிலையங்களுக்கு இடையில் இரட்டை ரயில்பாதை இணைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக, அந்த பகுதி ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வருகிற மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22627) மற்றும் திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22628) ஆகியவை நெல்லை - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருச்சியிலிருந்து நெல்லை வரையிலும் நெல்லையிலிருந்து திருச்சி வரையிலும் மட்டுமே இந்த வண்டி இயக்கப்படும்.
தாம்பரம் - நாகர்கோயில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (16191) மார்ச் 3 முதல் மார்ச் 12 வரை நெல்லை - நாகர்கோயில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு நெல்லையோடு நின்றுவிடும்.
மறுமார்க்கத்தில் நாகர்கோயில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (16192) மார்ச் 4 முதல் 13 வரை நெல்லை - நாகர்கோயில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு நெல்லையில் இருந்து புறப்படும்.
மார்ச் 6 அன்று புதுச்சேரியில் இருந்து புறப்படும் புதுச்சேரி - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (16861) மறுமார்க்கமாக மார்ச் 7 அன்று கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் கன்னியாகுமரி - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் (16862) ஆகியவை நெல்லை - கன்னியாகுமரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்தத் தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.