மதுரை சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் யாரும் அசுத்தம் செய்யக் கூடாது, மனிதர்கள் இறங்க கூடாது என்பதற்காக இரும்பு கேட் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆழ்வார்புரம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிந்துள்ளன. அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் நிரந்தர தளம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பகுதிக்குள் யாரும் இறங்க கூடாது என்று இரும்புகேட் அமைத்துள்ளனர் மாநகராட்சியினர்.
ஆத்துக்கே கேட்டை போட்டவய்ங்க மதுரைக்காரனுங்க என மீம்ஸ் போட்டு குவிக்கின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில், கேட்டை போட்டவர்கள் அதற்கு பூட்டை போடாது விட்டதால், மாடுகள் அசால்ட்டாக உள்ளே மேய்ந்து கொண்டிருந்தன.
ஆற்றில் கழிவுநீர், ரசாயனக் கழிவுகள் கலப்பதை தடுக்காமல், மண்டிக் கிடக்கும் கருவேல முள்களை அகற்றாமல் ஆற்றுக்கு கேட் போட்டுவிட்டால் மட்டும் சரியாகி விடுமா? இது என்ன தெர்மாகோல் கதையாக இருக்கு என பேசிக் கொள்கின்றனர் அந்த பகுதியை கடக்கும் மக்கள்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.