Home /local-news /

‘சிலுசிலுவென்று பூங்காற்று’ - போக்குவரத்தில்லாமல் பூங்காவாகும் யானைக்கல் தரைப்பாலம்!

‘சிலுசிலுவென்று பூங்காற்று’ - போக்குவரத்தில்லாமல் பூங்காவாகும் யானைக்கல் தரைப்பாலம்!

போக்குவரத்தில்லாமல்

போக்குவரத்தில்லாமல் பூங்காவாகும் யானைக்கல் தரைப்பாலம்

Madurai : மதுரை நகரில் வைகை தரைப்பாலங்கள் அகற்றப்பட்டு மேம்பாலங்களாக ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் மாற்றப்பட்டன. யானைக்கல் தரைப்பாலம், கோரிப்பாளையம் நெரிசலை சமாளிக்கும் வகையில் இருந்தது.

    துரை நகரில் வைகை தரைப்பாலங்கள் அகற்றப்பட்டு மேம்பாலங்களாக ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் மாற்றப்பட்டன. யானைக்கல் தரைப்பாலம், கோரிப்பாளையம் நெரிசலை சமாளிக்கும் வகையில் இருந்தது.

    தற்போது பாலம் ஸ்டேஷன் ரோடு, மீனாட்சி கல்லூரி சாலை என பல பகுதிகளிலும் சாலை விரிவாக்க பணிகள் ஏறக்குறைய முடிந்திருப்பதால் அப்பகுதி போக்குவரத்து நெரிசலுக்கு கொஞ்சம் தீர்வு கிடைத்திருக்கிறது.

    மேலும், சிம்மக்கல் - செல்லூரை இணைக்கும் எம்ஜிஆர் மேம்பாலம் யானைக்கல் தரைப்பாலத்திற்கு சரியான மாற்றாக இருக்கும் என்பதால் போக்குவரத்திற்கு அந்த மேம்பாலத்தின் வழியே வாகனங்கள் திருப்பிவிடப் பட்டுள்ளன.

    சிம்மக்கல் யானைக்கல் தரைப்பாலம் அழகான பூங்காவாக மாற்றப்பட உள்ளது. மேம்பாலத் தூண்களில் ஓவியங்கள் வரையும் பணிகள் தொடங்கியுள்ளன. ஆழ்வார்புரம் ஆற்றுப் பகுதியில் கட்டப்பட்ட தடுப்பணையால் கல்பாலம் பகுதியில் வைகை நீர் தேங்கியுள்ளது.

    இதனை அமர்ந்து ரசிப்பதே அலாதி சுகம் எனலாம். அதற்காக சாய்வு இருக்கைகளும் அமைக்கப்பட உள்ளன. நகரின் மையப்பகுதியில் ஆற்றின் நடுவே முந்நூறு மீட்டர் தூரத்திற்கு அழகான வியூ பாயின்ட் இனி மதுரை வைகையில் உருவாகிறது.

    தேங்கி நிற்கும் வைகை நீரில் மீன் உள்ளிட்டவற்றை உண்ணுவதற்கும், நீர் அருந்துவதற்கும், வெயிலுக்கு இதமாகவும் ஏராளமான பறவைகள் இங்கு வந்து குவிகின்றன. எனவே சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகச் சிறந்த ஸ்பாட்டாக இந்தப் பகுதி அமையும்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Suresh V
    First published:

    Tags: Madurai, Vaigai

    அடுத்த செய்தி