Home /local-news /

வாடிப்பட்டி : மின்சாரம் தாக்கி இறந்த கச்சைக்கட்டி காவலர் - உடல் அரசு மரியாதையுடன்  தகனம்

வாடிப்பட்டி : மின்சாரம் தாக்கி இறந்த கச்சைக்கட்டி காவலர் - உடல் அரசு மரியாதையுடன்  தகனம்

மதுரை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டியை சேர்ந்தவர் 30 வயதான மகேந்திரன். இவர் சமயநல்லூர் சப் டிவிஷன் தனிப்படை குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டியை சேர்ந்தவர் 30 வயதான மகேந்திரன். இவர் சமயநல்லூர் சப் டிவிஷன் தனிப்படை குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தார்.

    துரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டியை சேர்ந்தவர் 30 வயதான மகேந்திரன். இவர் சமயநல்லூர் சப் டிவிஷன் தனிப்படை குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தனது வீட்டில் மின்சார இணைப்பில் ஏற்பட்ட பழுதை சரிசெய்துகொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக மகேந்திரனை மின்சாரம் தாக்கியது.

    மின்சாரம் தாக்கியதால் தூக்கிவீசப்பட்ட மகேந்திரன் மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மகேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு மகேந்திரன் உடலுக்கு காவல்துறை அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர், மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் முன்னிலையில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் மகேந்திரன் உடல் தகனம் செய்யப்பட்டது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி