Home /local-news /

உசிலம்பட்டி : பூனையை மீட்க முயன்று கிணற்றில் மூழ்கிய முதியவர் மீட்பு 

உசிலம்பட்டி : பூனையை மீட்க முயன்று கிணற்றில் மூழ்கிய முதியவர் மீட்பு 

உசிலை

உசிலை : பூனையை மீட்க முயன்று கிணற்றில் மூழ்கிய முதியவர் மீட்பு 

பூனையின் உயிருக்காக தன் உயிரைப் பணயம் வைத்து கிணற்றுக்குள் இறங்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில், தத்தளித்துக் கொண்டிருந்த முதியவரை பத்திரமாக உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கிணற்றில் விழுந்த பூனையை மீட்க முயன்ற 65 வயது முதியவர் தவறி விழுந்து கிணற்றில் மூழ்கினார். துரிதமாக செயல்பட்டு முதியவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள் குழுவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    மதுரை உசிலம்பட்டி அருகே உள்ளது, நல்லுதேவன்பட்டி. இங்கு 65 வயதான பூங்கொடி என்பவர், பூனை கிணற்றில் விழுந்து விட்டதை கவனித்து அதனை மீட்பதற்காக கயிறு கட்டி கிணற்றில் இறங்கி உள்ளார்.

    குறிப்பிட்ட ஆழம் சென்றதும் கயிறு அறுந்துவிட பூங்கொடி கிணற்றில் விழுந்து விட்டார். கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த முதியவரை மீட்பதற்காக அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    தீயணைப்பு நிலையம் அருகில் இருப்பதால் தகவல் கிடைத்ததும் நான்கு நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வீரர்கள் வாகனத்துடன் வந்துவிட்டனர். ஆழம் அதிகம் என்பதாலும் பக்கச் சுவர்கள், தடுப்புச்சுவர்கள் இல்லாததாலும், மீட்பு கயிற்றை நாற்காலி முடிச்சாகத் தயார் செய்து முதியவரை கட்டி கிணற்றுக்குள் இருந்து மேலே ஏற்றினர்.

    சுமார் 45 நிமிடப் போராட்டத்துக்குப் பிறகு முதியவர் பத்திரமாக மேலே ஏற்றப்பட்டார். மயங்கிய நிலையில் இருந்த அவரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    பூனையின் உயிருக்காக தன் உயிரைப் பணயம் வைத்து கிணற்றுக்குள் இறங்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில், தத்தளித்துக் கொண்டிருந்த முதியவரை பத்திரமாக உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Murugesh M
    First published:

    Tags: Fire, Madurai, Usilampatti

    அடுத்த செய்தி