ஹோம் /Local News /

கிணற்றில் விழுந்து விடிய விடிய நீரில் தத்தளித்த மூதாட்டி.. உயிர் பிழைத்த அதிசயம்..

கிணற்றில் விழுந்து விடிய விடிய நீரில் தத்தளித்த மூதாட்டி.. உயிர் பிழைத்த அதிசயம்..

கிணற்றில்

கிணற்றில் விழுந்து விடிய விடிய நீரில் தத்தளித்த மூதாட்டி.. உயிருடன் மீட்பு

Madurai Usilampatti | இரவிலேயே கிணற்றில் விழுந்த மூதாட்டியை பாதுகாப்பாக உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறைக்கு அப்பகுதி மக்கள் தங்கள் பாராட்டினை தெரிவித்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  துரை செல்லம்பட்டி அருகே முண்டுவேலம்பட்டி பிரிவில் அசோகன் என்பவருக்குச் சொந்தமான கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றில் மார்ச் 10ம் தேதியன்றுஇரவு சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி விழுந்துள்ளார். அருகில் இருந்த கம்பி, கற்களை பிடித்துக் கொண்டே விடியும் வரை கிணற்றிலேயே தத்தளித்துள்ளார்.

  விடிந்ததும் தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் கயிறு இறக்கி அதன் உதவியுடன் பாட்டியை மீட்டனர். கிணற்றுக்குள் இருக்கும் போது தீயணைப்பு வீரர்களின் பேச்சுகளுக்கு பதிலளித்து வந்துள்ளார். மீட்பு தொடங்கியதும் மயக்கமடைந்துஇருக்கிறார்.

  அவரை மீட்டதும் 108 அவசர வாகனம் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டது. உடனடியாக விரிவான சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு மூதாட்டி ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார். மூதாட்டி மயங்கியதால் இதுவரையிலும் அவரைப் பற்றிய விபரம் தெரியவரவில்லை.

  மூதாட்டி எப்படி கிணற்றுக்குள் விழுந்தார் என்பதும் இன்னும் தெரியவில்லை. இரவிலேயே கிணற்றில் விழுந்த மூதாட்டியை பாதுகாப்பாக உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறைக்கு அப்பகுதி மக்கள் தங்கள் பாராட்டினை தெரிவித்து வருகின்றனர்.

  செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை

  Published by:Arun
  First published:

  Tags: Madurai, Usilampatti