Home /local-news /

உசிலம்பட்டி: கட்டிட வெடிவிபத்து பலி! தீயணைப்புத் துறை அலுவலர் விளக்கம்!

உசிலம்பட்டி: கட்டிட வெடிவிபத்து பலி! தீயணைப்புத் துறை அலுவலர் விளக்கம்!

உசிலம்பட்டி: கட்டிட வெடிவிபத்து பலி!தீயணைப்புத் துறை அலுவலர் விளக்கம்!

உசிலம்பட்டி: கட்டிட வெடிவிபத்து பலி!தீயணைப்புத் துறை அலுவலர் விளக்கம்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த வெடி தயாரிப்புப் பணியின்போது ஏற்பட்ட, திடீர் வெடிவிபத்தில் கட்டிடம் இடிந்து ஒருவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து விளக்குகிறார் உசிலம்பட்டி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் தங்கம்.

மேலும் படிக்கவும் ...
    துரை மாவட்டம் உசிலம்பட்டியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த வெடி தயாரிப்புப் பணியின்போது ஏற்பட்ட, திடீர் வெடிவிபத்தில் கட்டிடம் இடிந்து ஒருவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து விளக்குகிறார் உசிலம்பட்டி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் தங்கம்.

    \"இன்று பிப்ரவரி 15 காலை 11.15 மணிக்கு விபத்து தொடர்பாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. நிலையத்துக்கும் சம்பவம் நடந்த இடத்துக்கு இடையே தூரம் இரண்டு கிலோ மீட்டர்தான் என்பதால் சில நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்துவிட்டோம்.

    முறைகேடாக வெடி மருந்துகள் வாங்கி வைத்து பட்டாசுகள் தயாரித்து வந்துள்ளனர். அதிக சக்தி வாய்ந்த வெடிகள் வெடித்துச் சிதறியதால் முதல்தளம் முழுவதும் தகர்ந்து கிடந்தது. தரைதளம் அவ்வளவு சேதம் இல்லை.

    வெடித்த வேகத்தில் ஒருவர் உடல் சிதறி பலியாகி இருக்கிறார். சடலத்தை இடிபாடுகளுக்கு இடையில் இருந்து மீட்டெடுத்தோம். நல்ல வேளை வெடி விபத்தின் அதிர்வுகள் மற்ற கட்டிடங்களை தாக்காததால் பல உயிர்கள் ஆபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டன\" என்றார் விளக்கமாக.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன்-மதுரை
    Published by:Manosoundar M
    First published:

    Tags: Accident, Madurai, Usilampatti

    அடுத்த செய்தி