உசிலம்பட்டி உத்தப்பநாயக்கனூர் அருகே வாடிப்பட்டி விலக்கில் உசிலம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று (மார்ச் 7) காலை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
தகவலறிந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்பு துறையினர் விரைவாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ எரியத் தொடங்கியதில் புகைமண்டலம் அப்பகுதியை சூழத் தொடங்கியது. தீ அணைந்ததும் புகை சற்று தணிந்தது.
ஏதேனும் தீ பொருள்கள் பட்டு அதனால் தீப்பிடித்து குப்பைக் கிடங்கில் விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து நகராட்சி மற்றும் காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.