Home /News /local-news /

சாலையோரமே உலகம்... பொங்கல் கொண்டாட ஏங்கும் சோளகர் இன மக்கள்!

சாலையோரமே உலகம்... பொங்கல் கொண்டாட ஏங்கும் சோளகர் இன மக்கள்!

கல்மேடு

கல்மேடு பகுதியில் சிறிய இடங்களில் வசித்து வந்த இவர்கள் வசித்து வந்த இடத்தில் கொரோனா ஊரடங்கு காலக் கெடுபிடிகளாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாய் இந்தச் சாலையோரம் வசிக்கின்றனர்.

கல்மேடு பகுதியில் சிறிய இடங்களில் வசித்து வந்த இவர்கள் வசித்து வந்த இடத்தில் கொரோனா ஊரடங்கு காலக் கெடுபிடிகளாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாய் இந்தச் சாலையோரம் வசிக்கின்றனர்.

    கோலாகலமாக தைப் பொங்கல் கொண்டாடி வரும் வேளையில், தனித்துவிட்டதைப் போல தெப்பக்குளம் ஆற்றுப்பாலத்தில் சாலையோரம் சட்டையடித்து கலைநிகழ்வு நடத்தி, வாழ்க்கை நடத்தும் சோளகர் இனக் குடும்பங்கள்!

    கல்மேடு பகுதியில் சிறிய இடங்களில் வசித்து வந்த இவர்கள் வசித்து வந்த இடத்தில் பல்வேறு நெருக்கடிகளாலும் கொரோனா ஊரடங்கு காலக் கெடுபிடிகளாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாய் இந்தச் சாலையோரம் வசிக்கின்றனர். இப்போது வரை இங்குதான் அவர்கள் உலகம்.

    'சென்ற ஆண்டு விஜய் நற்பணி மன்றத்தார் எங்களை அழைத்து கலைநிகழ்ச்சி நடத்த வைத்து மகிழ்ச்சிப்படுத்தி, உணவு, புத்தாடை எனக் கொடுத்தனர். மனநிறைவாய், போன பொங்கல் அமைந்தது. தற்போது கொரோனா நெருக்கடியால் இந்தப் பொங்கல் கசக்கிறது' என்றனர்.

    'ஒருவேளை உணவுக்கும் கலைத்தொழில் நடத்திக் காசு பார்த்தால்தான் பிழைப்பு என்று இருக்கும் போது பொங்கல் புதுத் துணி, கரும்பு, கொண்டாட்டமெல்லாம் எங்களுக்கு ஏது?' என ஏக்கமாய் கூறியபடி வெவ்வேறு வீதிகள் நோக்கி தங்கள் தொழிலுக்காக நகர்ந்தனர்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Vijay R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி