Home /local-news /

மதுரை தெப்பக்குளம் : சிதையும் 16-கால் மண்டபம்; விபத்து நேரும் அபாயம்

மதுரை தெப்பக்குளம் : சிதையும் 16-கால் மண்டபம்; விபத்து நேரும் அபாயம்

தெப்பக்குளத்தைப்

தெப்பக்குளத்தைப் போலவே இந்த மண்டபமும் பழமை மிக்கது. கோயிலோ, வரலாறோ சொந்தம் கொள்ளாமல் இருப்பதாலேயே அதனைக் கண்டுகொள்ளாமல் விடுவது சரியல்ல எனவும் பொதுமக்கள் புலம்புகின்றனர்.

தெப்பக்குளத்தைப் போலவே இந்த மண்டபமும் பழமை மிக்கது. கோயிலோ, வரலாறோ சொந்தம் கொள்ளாமல் இருப்பதாலேயே அதனைக் கண்டுகொள்ளாமல் விடுவது சரியல்ல எனவும் பொதுமக்கள் புலம்புகின்றனர்.

    துரை தெப்பக்குளத்தின் வடமேற்கு மூலையில் மிகப்பெரிய 16-கால் மண்டபம் உள்ளது. தெப்பக்குளம் கட்டப்பட்ட காலத்தின் பிற்பகுதியில் இந்த மண்டபம் எழும்பியிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. பழங் காலங்களில் பொதுமக்கள் வந்தமர்ந்து இளைப்பாறுவதற்கென மண்டபம் பயன்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

    மதுரையின் கோயில் தொடர்பான எந்த விழாக்களும் இந்த மண்டபத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுவதில்லை. அதனாலேயே இரும்புகேட் போட்டு வீணாகப் பூட்டி வைத்துள்ளனர். கற்கள் பெயர்ந்து, களைச் செடிகள் முளைத்து, இணைப்புகள் விரிசல்விட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    கற்களாலான மண்டபம் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது, மிகப்பெரியளவில் உயிர்ச்சேதம் உண்டாக்கும். குறிப்பாக மாலைநேரம், விடுமுறை, திருவிழாக் காலங்களில் இந்த மண்டபத்தின் அருகில் மட்டுமே 50-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கும். ஆயிரக்கணக்கானோர் கூடிநிற்பார்கள். அப்போது ஏதேனும் அசம்பாவிதம் நிகழக் கூடாது என்பதே மக்களின் தவிப்பு.

    தெப்பக்குளத்தைப் போலவே இந்த மண்டபமும் பழமை மிக்கது. கோயிலோ, வரலாறோ சொந்தம் கொள்ளாமல் இருப்பதாலேயே அதனைக் கண்டுகொள்ளாமல் விடுவது சரியல்ல எனவும் பொதுமக்கள் புலம்புகின்றனர். தெப்பக்குளத்தைச் சுற்றி நிழலற்ற பகல் நேரங்களில் ஓய்வாக அமரவேனும், இந்த மண்டபத்தை புனரமைத்துத் தர மாநகராட்சி முன்வர வேண்டும்.

    மேலும், மண்டபத்தின் கல் இடுக்குகளில் மதுபாட்டில்கள் உள்ளிட்டவை ஆபத்தான முறையில் கிடக்கின்றன. எல்லாவற்றையும் அகற்றி சுத்தப்படுத்த வேண்டும். மக்கள் புழக்கத்தில் உள்ள எதுவும் அழியாது. மண்டபத்தை மக்கள் பயன்படுத்த வழி செய்து தொடர் பராமரிப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகின்றனர் மக்கள்.

    மண்டபத்தின் அருகே பூங்கா என்ற பெயரில் இருக்கும் திறந்தவெளி குப்பை மண்டலத்தையும் சரிசெய்து விட்டால் அந்த இடம் இன்னும் அழகாகும். இந்தாண்டு தெப்பத்திருவிழா நடைபெறாததால் அதற்கான செலவை இந்த மண்டபத்தைப் புதுப்பிக்க மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் முன்வந்தால் மகிழ்ச்சி எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

    மாநகராட்சி, தொல்லியல்துறை, மீனாட்சிக்கோயில், முக்தீஸ்வரர் கோயில், மாரியம்மன் கோயில், பொதுமக்கள் என இந்தத் தெப்பக்குளம் பகுதிக்கான அத்தனையும் ஒன்றுகூடினால், இந்த மண்டபம் இன்னும் பலநூறு காலத்திற்கு வரலாறு பேசி நிற்கும் என்பது மக்கள் எதிர்பார்ப்புடன் கூடிய உண்மை!

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Vijay R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி