மதுரையின் முக்கிய கோயில்களான மீனாட்சி கோயில், அழகர்கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் கோயிலில் துணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக கோயில்களில் 30 துணை ஆணையர்கள் நியமன அறிக்கை அரசின் சார்பில் வெளியாகி உள்ளது. இதில் மதுரை கோயில்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
அதன்படி மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில், அழகர்மலை கள்ளழகர் திருக்கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் ஆகிய கோயில்களில் துணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பண்பொழி திருமலை குமாரசுவாமி திருக்கோயில் உதவி ஆணையராக பணியாற்றி வந்த ஆ.அருணாச்சலம் மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலின் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
புதுக்கோட்டை உதவி ஆணையராக இருந்த நா.சுரேஷ் தற்போது மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
சென்னை ஆணையர் அலுவலக உதவி ஆணையராக இருந்த எம்.ராமசாமி இந்த அரசாணைபடி மதுரை அழகர்மலை கள்ளழகர் திருக்கோயிலின் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
புதிய துணை ஆணையராக பதவி ஏற்கும் அதிகாரிகளுக்கு கோயில் ஊழியர்கள், சக அதிகாரிகள், கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.