Home /local-news /

மதுரை: நொறுக்குத்தீனி மொத்த உற்பத்தியகத்தில் தீ - ரூ.5 லட்சம் மதிப்புக்கு பொருட்கள் சேதம் 

மதுரை: நொறுக்குத்தீனி மொத்த உற்பத்தியகத்தில் தீ - ரூ.5 லட்சம் மதிப்புக்கு பொருட்கள் சேதம் 

மதுரை: நொறுக்குத்தீனி உற்பத்தியகத்தில் தீ - ரூ.5 லட்சம் மதிப்புக்கு பொருட்கள் சே

மதுரை: நொறுக்குத்தீனி உற்பத்தியகத்தில் தீ - ரூ.5 லட்சம் மதிப்புக்கு பொருட்கள் சே

Madurai: உற்பத்திக் கூடத்தில் எதிர்பாராவிதமாக மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.

    மேலூரில் நொறுக்குத் தீனி உற்பத்திக் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

    மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி சிவன் கோயில் பகுதியில் நொறுக்குத் தீனி உற்பத்தி செய்யும் இடத்தில் தின்பண்டங்களை மொத்தமாகத் தயார் செய்து கடைகளுக்கு அனுப்புவது வழக்கம்.

    மிக்சர், காராசேவு, லட்டு, முறுக்கு போன்றநொறுக்குத் தீனிகள்இந்த உற்பத்திக் கூடத்தில் தயார் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் உற்பத்திக் கூடத்தில் எதிர்பாராவிதமாக மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உற்பத்தி கூடத்தில் இருந்த தின்பண்டங்கள், மின்சாதனப் பொருட்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சாம்பலாகின.

    சம்பவம் குறித்து தகவலறிந்த மேலூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுப்படுத்தி அணைத்தனர். இந்தத் தீ விபத்தால் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

    நொறுக்குத் தீனி மொத்த தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட இந்த தீவிபத்து சம்பவம் மேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன் - மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி