Home /local-news /

மழையால் குளிர்ந்த மதுரை மக்கள்.. வருண பகவானின் எதிர்பாராத சண்டே ட்ரீட்..

மழையால் குளிர்ந்த மதுரை மக்கள்.. வருண பகவானின் எதிர்பாராத சண்டே ட்ரீட்..

மதுரை

மதுரை : வானத்தின் சண்டே ட்ரீட்... நகர்ப்பகுதியை குளிர்வித்த திடீர் மழை!

Madurai Rains: வெயில் காலம் முடியும் வரை இப்படி அவ்வப்போது கோடை மழை பொழிந்தால் மதுரையில் வெயில் அவ்வளவாய் தெரியாது. வானமும் வர்ண பகவானும் தான் கருணை காட்ட வேண்டும் என மக்கள் பேசிக் கொண்டனர்.

    ங்குனி மாதம் தான் நடக்கிறது என்றாலும் மதுரை மாநகரில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த இரண்டு நாட்களாக வெயில் சுட்டெரித்தது. மார்ச் 20 ஞாயிறன்றும் வெயில் வாட்டியது.

    இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று (ஞாயிறு) மாலை 3.30 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் தோன்ற ஆரம்பித்தன. வெயில் சூழ்ந்த நிலையில் திடீர் வான் இருட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

    லேசான மண் வாசம் புறப்பட்டதும் மக்கள் மனம் மகிழ்ந்தனர். அதோடன்றி, மதுரை நகரின் சில பகுதிகளில் ஆங்காங்கே சடசடவென மழை பொழியத் துவங்கியது. குறிப்பாக, புதூர், மூன்றுமாவடி, சர்வேயர்காலனி, கருப்பாயூரணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    சில நிமிட நேரத்திற்கு நீடித்த மழை சற்று தணிந்து தூறலாக விழுந்தது. சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக இந்த மழைச் சூழல் தொடர்ந்தது. விடுமுறை நாள் என்றாலும் வெயிலால் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த மக்கள் மாலையில் வெளியில் பயணிக்கத் தொடங்கினர்.

    வெயில் காலம் முடியும் வரை இப்படி அவ்வப்போது கோடை மழை பொழிந்தால் மதுரையில் வெயில் அவ்வளவாய் தெரியாது. வானமும் வர்ண பகவானும் தான் கருணை காட்ட வேண்டும் என மக்கள் பேசிக் கொண்டனர்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai, Rain

    அடுத்த செய்தி