வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், மாவட்டக் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிக்கப்பட்ட வாகனங்கள் ஆகியவை ஏலத்துக்கு விடப்படுவதாக மாவட்ட எஸ்.பி., அறிவித்துள்ளார்.
மதுரை நகர் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5 டூவீலர்களும் 10 நான்கு சக்கர வாகனங்களும் ஏலம் விடப்படுகின்றன. ஜன.,31 காலை 11 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் நடக்கிறது.
ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் ஜன.,29 முதல் 31 வரை டெபாசிட் செலுத்தி பங்கேற்கலாம். டூவீலருக்கு ரூ.,1000, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.,2000 டெபாசிட் செலுத்த வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் ஜி.எஸ்.டி.,யுடன் உடனே தொகை செலுத்த வேண்டும்.
மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிக்கப்பட்ட 51 டூவீலர்கள், 22 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை ஜன.,31 காலை 10 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது.
ஏலம் எடுக்க விரும்புவோர் அன்று காலை 8:00 முதல் 10:00 மணி வரை வந்து பதிவு செய்யலாம். ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும். ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். ஏலம் எடுத்ததும் சரக்கு, சேவை வரி செலுத்தி வாகனத்தை பெறலாம்.
மேலும், இவ்வாகனங்களை ஜன.,28 முதல் 31 வரை பார்வையிடலாம் எனவும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.