மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் பகுதியில் இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் இன்பராஜ். அவரும் அவரது நண்பர் பரத்ரிஷி என்பவரும் மதுரையில் உள்ள தனியார் கல்லூரிக்கு சென்றுவிட்டு ஒரே டூவீலரில் திரும்பியுள்ளனர்.சோழவந்தான் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற அரசு பேருந்து, நண்பர்கள் வந்த டூவீலர் மீது மோதியது.
இதனால் பக்கவாட்டில் உரசியபடி பேருந்தின் மீது விழுந்துள்ளனர். இதில் பேருந்தில் சிக்கி கல்லூரி மாணவர் இன்பராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த மாணவர் பரத்ரிஷி 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காடுபட்டி போலீசார் இறந்த கல்லூரி மாணவர் இன்பராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.