மதுரையில் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேசமயம் இன்னொரு பக்கம், பெரிதும் எதிர்பார்க்கப்படும் நடிகர் இளைய தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்பட வெளியீடு திருவிழாவும் பட்டை கிளப்பி வருகிறது.
மதுரை சோலைமலை திரையரங்கில் பீஸ்ட் திரைப்பட வெளியீட்டிற்கான கொண்டாட்ட ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே ரசிகர் காட்சிக்கான டிக்கெட்டுகள் மதுரை திரையரங்குகள் எங்கும் விற்றுத் தீர்ந்து கொண்டிருக்கின்றன.
கொண்டாட்டத்தின் அடுத்த கட்டமாக சோலைமலை திரையரங்க வாயிலில் கட்அவுட் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கான சாரங்கள் கட்டுவது நடந்து கொண்டிருக்கிறது. இதை ரசிகர்கள் போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு டிரெண்ட்டாக்கி வருகின்றனர்.

சித்திரை திருவிழா நடக்கும் மதுரையில் பீஸ்ட் திருவிழ
ஏப்ரல் 13-ம் தேதியன்று சித்திரை திருவிழாவின் திக்குவிஜயம் நடக்கும் நாளில் தளபதி விஜயம் நடக்கிறது என மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர் இளைய தளபதி ரசிகர்கள்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.