மதுரை தியாகராசர் கல்லூரி பின்புறம் உள்ள ஸ்மார்ட் சிட்டி இணைப்பு ரோட்டில் தடுப்பு ஏற்படுத்தி, ரோடு பயன்படாமல் இருந்தது. அங்கு குப்பைகளை கொட்டி மிகவும் அசுத்தமாக துர்நாற்றம் வீசக் கூடிய வகையில் சுகாதார சீர்கேடு நிலவி வந்தது.
ஏற்கனவே இது குறித்து நியூஸ் 18 லோக்கலில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாகவும், குருவிக்காரன் சாலை பாலம் பயன்பாட்டுக்கு வந்ததாலும் இந்த இணைப்பு சாலை கழிவுகள் அகற்றப்பட்டு தடுப்புகள் நீக்கி பயன்பாட்டுக்கு வந்தது.
இதனால் தெப்பக்குளம் - அம்பிகா தியேட்டர் இடையே உள்ள ஆற்றுப் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்துள்ளது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.