மதுரை சிம்மக்கல் வக்கீல் புதுத்தெரு பகுதியில் சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிளாட்பாரத்தோடு கூடிய பாதாள சாக்கடை, டிராபிக் மைக் உள்ளிட்ட பல கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சாலை பணிக்காக சரளைக் கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை சாலையை செப்பனிடுவதற்காக அமைத்துள்ளனர். அவற்றை முழுமையாக முடிக்காமல் அப்படியே விட்டிருப்பதால் நாள்தோறும் வாகனங்களின் நெருக்கடியால் புழுதி கிளம்பி வருகிறது.
தார்ரோடு அமைப்பதற்கு நாட்கள் ஆகும் என்றால் குறைந்தபட்சம் சாலையை தண்ணீர் கொண்டு ஈரமாக்கினால்கூட புழுதி கிளம்பாமல் இருக்கும். ஆனால் பகல் வேளையில் காய்ந்து கிடக்கின்றன மண், கற்கள் மொத்தமாக புழுதி பரப்பி வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
வயதானவர்களும் குழந்தைகளும் சுவாச அலர்ஜி எதிர்கொள்ளும் அளவிற்கு அந்த பகுதியே புகை மூட்டமாக நாள்முழுவதும் காட்சி தருகிறது. உடனடியாக இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகள் கோரிக்கை.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.