அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வின் உறவினர்கள், திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளரின் கார் கண்ணடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் பாசபிரபு. இவருடைய தந்தை சந்திரன் விரகனூர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.
இதே பகுதியை சேர்ந்த தங்கராஜ், அவரது தந்தை வைத்தியநாதன் மற்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசனின் மருமகனுமான வெற்றிவேல் உட்பட 15 பேர் நேற்று முன்தினம் இரவு பாசபிரபு வீட்டின் முன்பு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் கல்லை தூக்கி போட்டு கார் கண்ணாடியை உடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. தேர்தல் முன்விரோதத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாசபிரபு சிலைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் பரப்புரை சூடுபிடித்து வரும் நிலையில், இரு கட்சி நிர்வாகிகளின் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.