Home /local-news /

மதுரை - செங்கோட்டை, மானாமதுரை - திருச்சி இடையே ஏப்.,1 முதல் கூடுதல் ரயில் இயக்கம்!

மதுரை - செங்கோட்டை, மானாமதுரை - திருச்சி இடையே ஏப்.,1 முதல் கூடுதல் ரயில் இயக்கம்!

மதுரை - செங்கோட்டை, மானாமதுரை - திருச்சி இடையே ஏப்.,1 முதல் கூடுதல் ரயில் இயக்கம

மதுரை - செங்கோட்டை, மானாமதுரை - திருச்சி இடையே ஏப்.,1 முதல் கூடுதல் ரயில் இயக்கம

Madurai Trains: பயணிகள் வசதிக்காக மதுரை - செங்கோட்டை மற்றும் மானாமதுரை - திருச்சி மார்க்கங்களில் கூடுதல் ரயில் சேவை ஏப்.,1 முதல் துவங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. அதன்படி, அறிவிக்கப்பட்டுள்ள புதிய ரயில் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. 

மேலும் படிக்கவும் ...
    யணிகள் வசதிக்காக மதுரை - செங்கோட்டை மற்றும் மானாமதுரை - திருச்சி மார்க்கங்களில் கூடுதல் ரயில் சேவை ஏப்.,1 முதல் துவங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. அதன்படி, அறிவிக்கப்பட்டுள்ள புதிய ரயில் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

    செங்கோட்டை - மதுரை விரைவு சிறப்பு ரயில் செங்கோட்டையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு காலை 10.35 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமார்க்கத்தில் மதுரை - செங்கோட்டை விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9.10 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.

    ரயில்கள் தென்காசி, கடையநல்லூர், பாம்பகோயில் சந்தை, சங்கரன் கோயில், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல். விருதுநகர், கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இந்த ரயில்களில் 13 இரண்டாம் வகுப்பு முன்பதிவில்லா பொதுப் பெட்டிகள், 2 காப்பாளர் மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.

    திருச்சி - மானாமதுரை விரைவு சிறப்பு ரயில் திருச்சியிலிருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.50 மணிக்கு மானாமதுரை வந்து சேரும். மறுமார்க்கத்தில் மானாமதுரை திருச்சி விரைவு சிறப்பு ரயில் மானாமதுரையிலிருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு திருச்சி சென்று சேரும்.

    ரயில்கள் குமாரமங்கலம், கீரனூர், வெள்ளனூர், புதுக்கோட்டை. திருமயம், செட்டிநாடு, கோட்டையூர், காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், பனங்குடி, சிவகங்கை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இந்த ரயில்களில் 8 டெமு டீசல் எலக்ட்ரிக்கல் (மல்டிபிள் யூனிட்ஸ்) பெட்டிகள் இணைக்கப்படும். இந்தத் தகவல்களை தெற்கு ரயில்வே தமது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai, Manamadurai, Trichy

    அடுத்த செய்தி