மதுரை மாவட்டம் ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் லிங்கவேல். இவர் தனது வீட்டில் வைத்திருந்த ஐந்தரை பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
லிங்கவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் சாப்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த எஸ்.பி பாஸ்கரன், காணாமல் போன நகைகளை உடனடியாக மீட்பதற்கு தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.
அதன்படி, சாப்டூர் காவல் நிலையத்தில் தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரல்ரேகை நிபுணர்கள் கொண்டு, சோதனை செய்யப்பட்டது. சந்தேகத்திற்கிடமான விரல்ரேகைப் பதிவுகள் சோதனையில் கிடைத்தது.
சந்தேக நபராக கருதப்பட்ட அணைக்கரைப்பட்டி ராமசாமிபுரத்தைச் சேர்ந்த நாகபாண்டி மகன் முத்துராஜாவை பிடித்து விசாரணை செய்தனர். அவரின் விரல்ரேகை பதிவுகளை எடுத்து ஏற்கனவே சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட விரல்ரேகை பதிவுடன் ஒப்பீடு செய்து பார்த்தனர். இதில் இரண்டும் ஒரே விரல்ரேகை பதிவுதான் என்பது உறுதியானது.
அதனடிப்படையில், முத்துராஜாவை கைது செய்து இந்த வழக்கில் கொள்ளை அடிக்கப்பட்ட ஐந்தரை சவரன் தங்க நகைகளை தனிப்படையினர் மீட்டனர். பின்னர், குற்றவாளி நாகராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.