Home /local-news /

அழகர்கோயில் பதினெட்டாம்படி ராஜகோபுரம்: 10 ஆண்டுகளுக்கு பின் புனரமைப்பு பணி தீவிரம்

அழகர்கோயில் பதினெட்டாம்படி ராஜகோபுரம்: 10 ஆண்டுகளுக்கு பின் புனரமைப்பு பணி தீவிரம்

அழகர்கோயில்

அழகர்கோயில் பதினெட்டாம்படி ராஜகோபுரம்: 10 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் புனரமைப்பு

மதுரை அழகர்மலை கள்ளழகர் திருக்கோயிலில் சக்தி வாய்ந்த தெய்வமாக பக்தர்கள் வழிபடுவது பதினெட்டாம் கருப்பண்ணசாமி சன்னதியைதான். மிகவும் பிரசித்தி பெற்ற சன்னதியான இது எழுநிலை ராஜகோபுரத்தையும் கோபுரக் கதவுகளையும் கொண்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மதுரை அழகர்மலை கள்ளழகர் திருக்கோயிலில் சக்தி வாய்ந்த தெய்வமாக பக்தர்கள் வழிபடுவது பதினெட்டாம் கருப்பண்ணசாமி சன்னதியை. மிகவும் பிரசித்தி பெற்ற சன்னதியான இது எழுநிலை ராஜகோபுரத்தையும் கோபுரக் கதவுகளையும் கொண்டுள்ளது.

    இந்த பதினெட்டாம்படி சன்னதி ராஜகோபுரத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக முதற்கட்டமாய் இன்று  மார்ச் 13 ஞாயிறன்று பாலாலய சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.

    அதன்படி இன்று  அதிகாலை 6 மணியளவில் புண்யாகவாகனம், அக்னி ஆராதனம், ததுக்த ஹோமம், மஹாபூர்ணாகுதி, அக்னி ஸமாரோபனம், யாத்ராதானம், கும்பம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து காலை 7.15 முதல் 7.55 மணிக்குள் மீன லக்னத்தில் பாலாலய சம்ப்ரோக்ஷணம், பஹூமானம், ஆசீர்வாதம், சாற்றுமுறை நிகழ்ச்சியும், ஆச்சார்ய கோஷ்டி வினியோகம் வைபவமும் நடைபெற்றன.

    இந்த பூஜை நிகழ்வுகள் அனைத்துமே அர்த்த மண்டபத்தில் நடக்கிறது. எனவே அர்த்த மண்டப தரிசனத்திற்கு காலை 9.30 மணிக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த பூஜை தவிர பிற நேரங்களில் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்து கொள்ளலாம் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Murugesh M
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி