மதுரையில் ஏப்ரல் 5-ம் தேதி ஆங்காங்கே சில பகுதிகளில் சிறிதுநேரம்
மழை பெய்தது. அதற்கடுத்த நாள்களில் வெயில் தாக்கம் இருந்தது.
இந்நிலையில் இன்று காலையில் இருந்து வெயில் தொடங்கிய நிலையில், முற்பகல் வேளையிலேயே மழைமேகம் சூழ்ந்து இதமான வானிலை நிலவியது. பின்னர் காலை 11.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது.
புதூர், தல்லாகுளம், கோரிப்பாளையம், பெரியார் என நகரின் முக்கியப் பகுதிகள் எங்கும் மழை பொழிந்தன. இதனால், இத்தனை நாள்கள் வெயிலில் காய்ந்த மதுரை மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
மேலும் இரவு வரை தொடர்ந்து வெப்ப புழுக்கம் நீங்கி குளுமையான தட்பவெப்பம் மதுரை நகர்ப்பகுதியில் நிலவுகிறது.
வெப்பச் சலனம் காரணமாக இரண்டு நாள்களுக்கு தமிழகத்தில் மழை பொழிவு உண்டு என வானிலை மையம் தெரிவித்த நிலையில் இன்று மதுரை நகரில் பெரும்பாலான பகுதிகளில் மழை பொழிந்தது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.