Home /News /local-news /

மதுரை : எக்ஸ்பிரஸ்களில் கூடுதல் பெட்டி - பொங்கல் நெரிசலை சமாளிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை!

மதுரை : எக்ஸ்பிரஸ்களில் கூடுதல் பெட்டி - பொங்கல் நெரிசலை சமாளிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை!

மதுரை : எக்ஸ்பிரஸ்களில் கூடுதல் பெட்டி - பொங்கல் நெரிசலை சமாளிக்க ரயில்வே நிர்வா

மதுரை : எக்ஸ்பிரஸ்களில் கூடுதல் பெட்டி - பொங்கல் நெரிசலை சமாளிக்க ரயில்வே நிர்வா

பொங்கல் கூட்டநெரிசலை சமாளிக்க கூடுதல் பெட்டிகளை இணைத்து அட்டவணையை தெற்கு ரயில்வே இன்று (ஜன.,12) வெளியிட்டுள்ளது.

    பொங்கல் கூட்டநெரிசலை சமாளிக்க கூடுதல் பெட்டி அட்டவணையை தெற்கு ரயில்வே இன்று (ஜன.,12) வெளியிட்டுள்ளது. மதுரை சந்திப்புக்கு வந்து சேரும், புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சிலவற்றில் கூட்டநெரிசலை சமாளிக்க இன்றுமுதல் நான்கு நாள்களுக்கு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

    இன்று (ஜன.,12) முதல் ஜன.,16 வரையிலான நாள்களுக்கு 16343 திருவனந்தபுரம் - மதுரை எக்ஸ்பிரஸ் மற்றும் மறுமார்க்கத்தில் 16344 மதுரை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்களில் படுக்கை வசதி பெட்டி தலா ஒன்று கூடுதலாய் இணைக்கப்படுகிறது.

    இன்று (ஜன.,12) முதல் ஜன.,16 வரையிலான நாள்களுக்கு 22657 தாம்பரம் - நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் மறுமார்க்கத்தில் நாளை ஜன., 13 முதல் ஜன., 17 வரையிலான நாள்களுக்கு 22658 நாகர்கோயில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் படுக்கை வசதி பெட்டி தலா ஒன்று கூடுதலாய் இணைக்கப்படுகிறது.

    இன்று (ஜன.,12) முதல் ஜன.,16 வரையிலான நாள்களுக்கு 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயிலிலும் மறுமார்க்கத்தில் நாளை ஜன.,13 முதல் ஜன.,17 வரையிலான நாள்களுக்கு 16128 குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இரண்டாம் வகுப்பு பொது பெட்டி தலா ஒன்று கூடுதலாய் இணைக்கப்படுகிறது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Karthick S
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி