மதுரை அண்ணாநகர் வைகையாற்றுப் பாலம் பகுதியில் ஆற்றங்கரையோரம் போடப்பட்டுள்ள ஸ்மார்ட்சிட்டி சாலையில் தியாகராஜர் கல்லூரி பின்புறப் பகுதி ரோடு பயன்பாடின்றி, கழிவுகள் கொட்டப்படும் ஏரியாவாக மாறி, நாறிக்கொண்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
விரகனூர் சுற்றுச்சாலை முதல் குருவிக்காரன் பாலம் வரை ஸ்மார்ட்சிட்டி சாலைப் பணிகள் முழுமையாக முடிந்துள்ளன. இதில், தியாகராஜர் கல்லூரி பின்புறம் ஆற்று மேம்பாலத்தில் இருந்து போடப்பட்டுள்ள இணைப்புச் சாலை இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
இதனால், அந்த குறிப்பிட்ட சாலைப் பகுதி குப்பை போடும் ஏரியாவாகவும், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்களுக்கான பகுதியாகவும் மாறிவிட்டது. இது சாலையில் செல்லும் பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது.
பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள இந்த சாலையை, உரிய அடிப்படை வசதிகளுக்கு ஏற்பாடு செய்து உடனடியாக பயன்பாட்டுக்குத் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.